‘இவ்ளோ கஷ்டப்பட்டு கடைசியில இப்டி ஆகிருச்சே’.. நூழிலையில் தவறவிட்ட ஸ்டெம்பிங்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 04, 2019 10:50 PM
வில்லியம்சனின் அதிரடியான ஆட்டத்தால் ஹைதராபாத் அணி 175 ரன்களை குவித்துள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 54 -வது போட்டி இன்று(04.05.2019) பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 8 -ல் தோல்வியும், 4 -ல் வெற்றியும் பெற்று 9 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. மேலும் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பையும் பெங்களூரு அணி இழந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து 10 போட்டிகளில் டாஸ் தோல்வியடைந்து வந்த விராட் கோலி பெங்களூரு அணியின் இன்றைய கடைசி போட்டியில் டாஸ் வென்றது மகிழ்ச்சியைத் தருவதாக கூறியுள்ளார். டாஸ் வென்ற கோலி முதலில் பௌலிங்கை தேர்ந்தெடுத்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் மனிஷ் பாண்டே 1 ரன் எடுத்திருந்த போது சஹால் வீசிய ஓவரில் நூழிலையில் ஸ்டெம்பிங்கில் இருந்து தப்பித்தார். ஆனாலும் 9 ரன்களில் வாசிங்கடன் சுந்தர் வீசிய ஓவரில் மனிஷ் பாண்டே அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.
WATCH: Missing the stumps by a whisker
— IndianPremierLeague (@IPL) May 4, 2019
Full video here 📹📹https://t.co/QVlzXbyrGF #RCBvSRH pic.twitter.com/dmss201bmo
