‘ஒரு வழியா கடைசி போட்டியில் இது நடந்திருச்சு’.. தொடர்ந்து 10 போட்டிகளுக்கு பின் கோலிக்கு நடந்த அதிசயம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 04, 2019 09:09 PM

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இந்த ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது.

IPL 2019: RCB Captain Kohli wins toss elect to bowl first against SRH

ஐபிஎல் டி20 லீக்கின் 54 -வது போட்டி இன்று(04.05.2019) பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 8 -ல் தோல்வியும், 4 -ல் வெற்றியும் பெற்று 9 புள்ளிகளுடன்  கடைசி இடத்தில் உள்ளது. மேலும் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பையும் பெங்களூரு அணி இழந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து 10 போட்டிகளில் டாஸ் தோல்வியடைந்து வந்த விராட் கோலி பெங்களூரு அணியின் இன்றைய கடைசி போட்டியில் டாஸ் வென்றது மகிழ்ச்சியைத் தருவதாக கூறியுள்ளார். டாஸ் வென்ற கோலி முதலில் பௌலிங்கை தேர்ந்தெடுத்துள்ளார்.

இதனை அடுத்து ஹைதராபாத் அணி பெங்களூரை வீழ்த்தி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் செல்ல வேண்டும் என முனைப்பு காட்டிவருகிறது.

Tags : #IPL #IPL2019 #VIRATKOHLI #RCBVSRH #PLAYBOLD #ORANGEARMY