'மிகப்பெரும்' தொகை.. இளம் 'வீரரை' விட்டுக்கொடுத்து.. 'அஸ்வினை' வாங்கிய அணி.. என்ன காரணம் ?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 08, 2019 08:33 PM
ஐபிஎல் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதனால் ஐபிஎல் தொடர்பான செய்திகள் மிகுந்த கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில் லேட்டஸ்ட் செய்தி அஸ்வினை பஞ்சாப் அணி வேறு ஒரு டீமுக்கு விற்பனை செய்தது தான். அதுதொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதாவது அஸ்வினை சுமார் 1.5 கோடி கொடுத்து டெல்லி அணி வாங்கி இருக்கிறது. வெறும் 1.5 கோடி தானே என நினைக்காதீர்கள். அஸ்வினை கடந்த ஆண்டு பஞ்சாப் அணி வாங்கிய 7.6 கோடிகளையும் அஸ்வினுக்கு அவர்கள் கொடுக்க வேண்டும். மேலும் 2020-ம் ஆண்டு ஏலத்தில் அனைத்து டீம்களும் கலைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் அஸ்வினுக்கு சுமார் 9.1 கோடிகள் மேலும் ஜகதீஷா சுச்சித் என்ற உள்ளூர் வீரரையும் பஞ்சாப் அணிக்கு விட்டுக்கொடுத்து அஸ்வினை டெல்லி அணி வாங்கியுள்ளது. இந்த தொகைக்கு ஏற்ப அஸ்வினின் பந்து சுழலுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
