"அம்மா, நான் இந்தியன் 'டீம்'ல செலக்ட் ஆகிட்டேன்..." சொன்ன அடுத்த 'நிமிஷம்' இது தான் நடந்துச்சு... பல வருஷ 'போராட்டம்'... உடைந்து போன 'சூர்யகுமார்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு அடுத்தபடியாக இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெறவுள்ளது.

இந்த டி 20 தொடருக்காக, இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு தமிழக வீரர் நடராஜன் மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார். அது மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், வருண் சக்ரவர்த்தி மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோர் முதல் முறையாக சர்வதேச அணிக்கு ஆடத் தேர்வாகியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து பல ஐபிஎல் சீசன்களிலும், முதல் தர போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வந்த போதும், சர்வதேச அணிக்கு ஆடுவதற்கான கதவு திறக்கப்படவில்லை. தொடர்ந்து, அவர் பெயர் புறக்கணிக்கப்பட்டு வந்ததையடுத்து, அவரது ரசிகர்கள் அதிகம் வருத்தமடைந்திருந்தனர்.
இந்நிலையில், முதல் முறையாக சர்வதேச அணியில் ஆடும் வாய்ப்பு சூர்யகுமாருக்கு கிடைத்துள்ளது. இதனால், ரசிகர்கள் அதிகம் மகிழ்ச்சியடைந்தனர். சர்வதேச அணிக்காக தான் தேர்வானது குறித்து குடும்பத்தினர் என்ன கூறினர் என்பதை சூர்யகுமார் தற்போது விளக்கியுள்ளார்.
'இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடருக்கான இந்திய அணியில், எனது பெயரைக் கண்டதும் நான் கண்ணீர் விட்டு அழுதேன். அதன் பிறகு, எனது பெற்றோரிடம் இந்த தகவலைத் தெரிவித்த போது, அவர்களும் கண்ணீர் விட்டார்கள். தொடர்ந்து, மனைவி மற்றும் சகோதரிக்கு கான்ஃபரன்ஸ் வீடியோ கால் செய்தேன். அனைவரும் சேர்ந்து அழ ஆரம்பித்து விட்டோம். என்னுடன் சேர்ந்து அவர்களும் இந்த கனவை நீண்ட காலமாக சுமந்து வந்தனர்.
இது ஒரு நீண்ட பயணமாக இருந்தது. அவர்கள் தான் என்னுடன் இருந்தனர். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்ததை பார்த்த போது, சிறப்பாக இருந்தது. இந்திய அணிக்காக ஆட வேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், எனக்கான நேரம் தற்போது வந்து விட்டது' என உருக்கமாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
