"IPL போட்டிகளில் விளையாட வராதீங்க".. டேவிட் வார்னரை வசைபாடிய சேவாக்.. என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னரை கடுமையாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்.
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன.
இந்த தொடரில் டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்திருப்பது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடைசியாக நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது டெல்லி. இந்த போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 199 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து சேஸிங்கில் இறங்கிய டெல்லி 20 ஓவர் முடிவில் 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் நிதானமாக ஆடிய சேவாக் 55 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். இது ரசிகர்களுக்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சேவாக்,"நீங்கள் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க வேண்டும். ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களிடமிருந்து எவ்வாறு அதிரடியாக ஆட வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள். அப்படி முடியவில்லை என்றால் தயவுசெய்து ஐபிஎல் போட்டிகளுக்கு விளையாட வர வேண்டாம்.
டேவிட் வார்னர் 30 ரன்களில் ஆட்டம் இழப்பது டெல்லி அணிக்கு நல்ல விஷயமே. ஏனெனில் அவர் 50 அல்லது 60 ரன்கள் எடுக்கும் போது பின்வரிசையில் வரும் அதிரடி ஆட்டக்காரர்களான ரோமன் பாவல் மற்றும் அபிஷேக் போரல் போன்ற வீரர்களுக்கு ஆடுவதற்கு போதுமான வாய்ப்பும் நேரமும் கிடைப்பதில்லை. அவர்களைப் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் அதிக பந்துகளில் ஆட வேண்டும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.