'பட்டாசு வெடிக்காதீங்க ப்ளீஸ்...' FANS-க்கு இன்ஸ்டாகிராமில் விராட் கோலி வேண்டுகோள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன் ரசிகர்களுக்கு தீபாவளியன்று பட்டாசு வெடிக்க வேண்டாம் என தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் அன்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
![Virat Kohli request not to explode firecrackers on Diwali. Virat Kohli request not to explode firecrackers on Diwali.](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/virat-kohli-request-not-to-explode-firecrackers-on-diwali.jpg)
இந்தியாவில் அனைத்துவித மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், அனைத்து மக்களுக்கு தீபாவளி வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து ஒரு கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்ச்சி, அமைதி, செழுமையுடன் வாழ இந்த தீபாவளி பண்டிகைக்கு இறைவன் ஆசிர்வதிக்கட்டும். தீபாவளி என்றாலே நாம் அனைவருக்கும் நினைவு வருவது பலகாரமும், பட்டாசும் தான். ஆனால் நாம் இந்த தீபாவளியன்று பட்டாசு வெடிக்க வேண்டாம் என்பதை மனதில் கொள்ளுங்கள். சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, விளக்குகள் மற்றும் இனிப்புகள் வழங்கி உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)