'இந்தியாவுல தீபாவளிக்குள்ள கண்டிப்பா'... 'தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்புக்கு நடுவே'... 'நல்ல செய்தி சொன்ன சுகாதாரத்துறை மந்திரி!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு முன் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தினமும் பாதிப்பு 75 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருவது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 36,21,246 ஆக உள்ளது. இந்த சூழலில், தீபாவளி பண்டிகைக்கு முன் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "தொற்றுநோயைக் கையாள்வதில் நாடு மிகவும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. கொரோனா பரவல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்குள் கட்டுக்குள் வந்துவிடும். நம் நாட்டுத் தலைவர்கள் முதல் மக்கள் வரை அனைவரும் ஒன்றாக இணைந்து பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு உறுதியாவதற்கு முன்பே இதுதொடர்பாக சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி என் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு தற்போது வரை 22 முறை சந்தித்து வைரஸ் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.