'ச்சே, அவர் இப்படி ஒரு காரியத்தையா பண்ணியிருக்காரு'... 'மனைவியின் சித்தப்பாவிற்கு சரியான தண்டனை கொடுக்கணும்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Feb 10, 2021 03:48 PM

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ச பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பதிவில், ''என்.வீ. திவாகரன் என்பவர் தனது மனைவியின் சிறிய தந்தை எனவும் அவரது மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் ரோஹித்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Sri Lanka- PM\'s son demands action on wife\'s former step father

தனது மனைவி டட்யானாவின் தாயைத் திவாகரன் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்ட போதிலும் டட்யானாவின் தந்தை அவரல்ல என ரோஹித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதனால் அவருடன் எனக்குப் பெரிய அளவில் எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ள அவர், கடந்த சில ஆண்டுகளாக அவருடன் முழுமையான எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

Sri Lanka- PM's son demands action on wife's former step father

பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த திவாகரன் அங்கிருந்த பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்தாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தராதரம் பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ரோஹித்த ராஜபக்ச, அவர்களின் சமூக அந்தஸ்தைப் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்'' எனத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Sri Lanka- PM's son demands action on wife's former step father

இலங்கை பிரதமரின் மகன் ரோஹித்த ராஜபக்சவின் இந்த ட்விட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sri Lanka- PM's son demands action on wife's former step father | World News.