இரட்டை சதம் அடித்து விராத் கோலி படைத்த மாஸ் சாதனை.. ஆனால் கிரவுண்டுல இல்லையாம்.. அப்போ எங்க?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம் பின்தொடரும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
இதில் கால்பந்து ஜாம்பவான்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் விராத்தை விட அதிக பின்தொடர்பவர்களை கொண்டுள்ளனர். விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் செவ்வாயன்று 200 மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாண்டியது.
கால்பந்து ஜாம்பவான்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸிக்கு பிறகு இந்த சாதனையை எட்டிய முதல் இந்தியர் மற்றும் மூன்றாவது விளையாட்டு வீரர் கோலி ஆவார்.
இன்ஸ்டாகிராமில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு தற்போது 334 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர், போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ 451 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் 175 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் கோலிக்கு பின் நான்காவது இடத்தில் உள்ளார்.
சமீப வருடங்களாக மோசமான பார்மில் இருந்தபோதிலும் கோலி இந்த இலக்கை எட்டியுள்ளார். அவர் நவம்பர் 2019 முதல் ஒரு சர்வதேச சதத்தை கூட அடிக்கவில்லை. 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கோலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 16 போட்டிகளில் 22.73 சராசரி மற்றும் 115.98 ஸ்டிரைக் ரேட்டில் 341 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியை கோலி ராஜினாமா செய்தார், பின்னர் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டனானார்.
தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு கோலி இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார், ரோஹித் அவருக்குப் பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஐபிஎல் 2021 சீசனுக்குப் பிறகு கோலி ஆர்சிபியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.
Also Read | இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் T20 போட்டிகள்.. சூடு பிடிக்கும் டிக்கெட் விற்பனை! விலை எவ்வளவு தெரியுமா?