“நீ இல்லன்னா நான் என்ன செஞ்சிருப்பேன்”… அனுஷ்கா சர்மா பற்றி கோலியின் ROMANTIC பதிவு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Vinothkumar K | May 02, 2022 06:13 PM

விராட் கோலி அவரின் மனைவி அனுஷ்கா சர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Virat kohli Romantic status on anushka Sharma birthday

Also Read |  இதனாலதான் CSK கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகினாரா?.. சீக்ரெட்டை உடைத்த தோனி..!

காதல், திருமணம், குழந்தை….

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாலிவுட் பிரபல நடிகையுமான அனுஷ்கா ஷர்மா சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். அதையடுத்து அவர்கள் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு வாமிகா என்ற மகள் இருக்கிறார். குழந்தையின் புகைப்படத்தை அதிகமும் சமூகவலைதளங்களில் பகிராமல் இருவருமாக வளர்த்து வருகின்றனர்.

Virat kohli Romantic status on anushka Sharma birthday

இது சம்மந்தமாக அனுஷ்கா சர்மா, "நாங்கள் எங்கள் குழந்தைக்கு தனியுரிமையை வழங்குகிறோம், மேலும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி தனது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ அவளுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம். குழந்தைக்கு வயதாகிவிட்டால் அவளது நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. எனவே உங்கள் (ஊடகங்கள்) ஆதரவு தேவை ". எனக் கூறியிருந்தனர்.

Virat kohli Romantic status on anushka Sharma birthday

கோலியின் மோசமான 2 ஆண்டுகள்…

2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பைப் பெற்ற கோலி 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார். இருப்பினும் அந்த அணி ஐபிஎல் கோப்பையை இதுவரையில் கைப்பற்றாததால் அதற்கு பொறுப்பேற்று அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே போல அடுத்தடுத்து டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார். இது சர்வதேசக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அதையடுத்து தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரிலும் கோலி சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை.  கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் இந்த மோசமான காலகட்டத்தில் கோலிக்கு மனதளவில் ஆதரவாக இருந்து வருகிறார் அனுஷ்கா. கோலி விளையாடும் போட்டிகளை மைதானத்துக்கே வந்து பார்த்து உற்சாகமூட்டி வருகிறார்.

Virat kohli Romantic status on anushka Sharma birthday

அனுஷ்காவின் பிறந்தநாளில் உருகிய கோலி…

இந்நிலையில் நேற்று அனுஷ்கா சர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோலி அவரை பற்றி புகழ்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் “நீ பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி. நீ இல்லாமல் போயிருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்றே தெரியவில்லை. நீ உண்மையில் உள்ளேயும் வெளியேயும் அழகானவள். இனிமையான நபர்களோடு அருமையான மாலை நேரமாக அமைந்தது.” எனக் கூறியுள்ளார்.

Virat kohli Romantic status on anushka Sharma birthday

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #VIRAT KOHLI #ANUSHKA SHARMA #ANUSHKA SHARMA BIRTHDAY #VIRAT KOHLI ROMANTIC STATUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat kohli Romantic status on anushka Sharma birthday | Sports News.