சும்மா சொல்ல கூடாது, 'ரெண்டு பேருமே' கலக்கிட்டீங்க...! 'பாகிஸ்தான் ஜெயித்த உடனே கோலி செய்த காரியத்தால்...' - 'இந்திய' அணியின் மதிப்பு உயர்ந்திடுச்சு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய டி-20 உலகப்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர்களுடன் பேசும் விராட் கோலியின் ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

உலகக்கோப்பை டி-20 தொடரின் சூப்பர் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய (24-10-2021) ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த தொடர் பெரிதும் எதிர்பார்ப்புடன் ரசிகர்களால் பார்க்கப்பட்டது.
துபாயில் நடைபெற்று வரும் இந்த தொடரில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய விராட் கோலி 57 ரன்களும், ரிஷப் பண்ட் 39 ரன்களும் எடுத்தனர்.
அதன்பின் களமிறங்கிய மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன்கள் எடுக்காததால் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த வெறும் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் அணியின் அபாரமான பந்து வீச்சு.
அதிகபட்சமாக ஷாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கியது.
பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமும், ரிஸ்வானும் துவக்க வீரர்களாக களமிறங்கி மொத்த ஆட்டத்தையும் அவர்களே முடித்தும் வைத்தனர். இந்திய அணியின் பந்து வீச்சை அசால்ட்டாக கையாண்ட இருவரும் மளமளவென ரன்னும் குவித்தனர்.
17.5 ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் 152 ரன்களை பாகிஸ்தான் எடுத்தது. பாபர் அசாம் 68 ரன்களுடனும், ரிஸ்வான் 79 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்றைய அணியில் சிறப்பாக விளையாடிய பாபர் அசாமுடனும், ரிஸ்வானுடம் விராட் கோலி பேசும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறப்பாக விளையாடியதாக இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ரிஸ்வானை கட்டியணைத்து வெகுவாக பாராட்டினார்.

மற்ற செய்திகள்
