'அரபிக்குத்து' ஃபீவர் நம்ம இந்தியன் பிளேயர்ஸையும் விட்டு வைக்கல.." கோதாவில் இறங்கி மரண மாஸ் காட்டிய இளம் வீரர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள், வரும் மார்ச் 26 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது. இதன் முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

TN Budget 2022: உயர் கல்வி மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000.. ஆனா இவங்களுக்கு மட்டும் தான்!
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால், அனைத்து அணிகளும் ஏற்கனவே பயிற்சியை ஆரம்பித்து தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
பொதுவாக, ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி, இந்திய அணியில் பல இளம் வீரர்கள் இடம்பெற்று ஆடி வருகின்றனர்.
இளம் வீரர்கள்
அந்த வகையில், இந்த முறையும் U 19 போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து, பல இளம் வீரர்களை ஐபிஎல் அணிகள் தட்டித் தூக்கியுள்ளது. இதனால், இந்த முறை எந்தெந்த இளம் வீரர்கள், தங்களின் அணிகளுக்கு வேண்டி சிறப்பாக ஆடி, சர்வதேச அணியில் இடம்பெறும் வாய்ப்பினை பெறுவார்கள் என்பதனையும் பார்க்க, ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
ஆவேஷ் கான்
மேலும், இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இதில், லக்னோ அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் இடம்பிடித்துள்ளார். இவர் கடந்த சீசனில், டெல்லி அணிக்காக சிறப்பாக பந்து வீசி, இந்திய அணியில் ஆடும் வாய்ப்பினையும் பெற்றிருந்தார்.
மாஸான ஆட்டம்
இந்நிலையில், மற்றொரு இந்திய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயருடன், ஆவேஷ் கான் நடனமாடிய வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், அவர்கள் ஆடிய பாடல் என்ன என்பது தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசு பொருளாகியுள்ளது. விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் 'பீஸ்ட்' படத்தின் அரபிக்குத்து என்னும் பாடல், கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
புது 'அரபிக்குத்து' வெர்ஷன்
அன்று முதல் இன்று வரை, பல ரசிகர்கள் மற்றும் சினிமா உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதே பாடலை கையில் எடுத்த ஆவேஷ் கான் மற்றும் வெங்கடேஷ் ஐயர், மிகவும் அசத்தலாக நடனமாடி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
மற்ற பிரபலங்களின் அரபிக்குது வெர்ஷன்களை போல, இந்த வீடியோவும் அதிக லைக்குகளை அள்ளி வருகிறது. முன்னதாக, விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மாஸ்டர் திரைப்படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கும், பல கிரிக்கெட் வீரர்கள் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
