அவரோட 'குளோனிங்' தான் வெங்கடேஷ் ஐயர்...! 'அட அச்சு அசலா ஒரே மாதிரி இருக்காங்க...' - 'முன்னாள் வீரருடன்' ஒப்பிட்ட டேவிட் ஹசி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுக்கும் உற்றுநோக்கும் வீரராக திகழ்பவர் கொல்கத்தா அணியின் வீரர் வெங்கடேஷ் ஐயர். இந்த ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணிக்கே தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (13-10-2021) டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதற்கு அடித்தளமாக அமைந்தவர் வெங்கடேஷ் ஐயர் தான் என்று கொல்கத்தா அணி கேப்டன் புகழாரம் சூட்டியிருந்தார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய வெங்கடேஷ் 320 ரன்களை அடித்துள்ளார். இதில் 3 அரைசதங்களை அடித்து 125 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
இந்நிலையில், கொல்கத்தா அணியின் மெண்டாரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரருமான டேவிட் ஹசி வெங்கடேஷ் குறித்து கூறியுள்ளார்.
அதில், 'தற்போது எங்கள் அணியில் இருக்கும் வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணிக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக மாறி வருகிறார். அவரின் திறமைகளை இந்த கிரிக்கெட் தொடரில் தான் கண்டோம்.
அவர் ஒரு மிக அருமையான வீரர் மட்டுமல்ல அற்புதமான மனிதர். அவர் தன்னுடைய முதல் பந்திலிருந்தே அடித்து ஆடத் தொடங்கிவிடுகிறார். அவரிடம் மட்டையை கொடுத்தால் ஒரு சில பந்துகளை சந்தித்த பின் தோற்கவிருக்கும் தொடரை கூட வெற்றி பாதைக்கு கூட்டி கொண்டு செல்லும் திறமை அவருக்கு உண்டு.
அதோடு, எங்கள் அணியில் இருக்கும் தொடக்க வீரர்களான வெங்கடேஷ் மற்றும் கில் இருவரும் போட்டிபோட்டு சிறப்பாக ஆடுகிறார்கள். வெங்கடேஷ் உயரமாக, நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங் குளோன் போன்று உள்ளார் என எனக்கு தோன்றும். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
தற்போது சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட திறமையுள்ள வீரர்களை களமிறக்குவோம். இறுதிப்போட்டியி்ல் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். சிஎஸ்கே அணிக்கு எதிராக சரியான திட்டமிடலை செய்ய வேண்டும் ஏனென்றால் வாய்ப்பு இருவருக்கும் சமமாக இருக்கிறது' எனக் டேவிட் ஹசி தெரிவித்தார்.