இந்த 'ஜெர்ஸி'ய நான் அணிய போறேனா...? இது கனவா? இல்ல நிஜமா...? 'இப்படியெல்லாம்' நடக்கும்னு சத்தியமா நினைக்கல...! - 'உச்சகட்ட' கொண்டாட்டத்தில் இளம் வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவரும் நவம்பர் 17-ஆம் தேதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஆடவுள்ளது. இந்நிலையில் பி.சி.சி.ஐ இந்திய அணியில் ஆடும் வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஐபிஎல் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இளம் வீரர் ஆல் ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அதிரடியாக விளையாடி ரன் சேர்த்து அசத்தியத்தின் காரணமாக தற்போது அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தன் மகிழ்வை பகிர்ந்துள்ள வெங்கடேஷ் ஐயர், 'இதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. கிரிக்கெட் மட்டையை பிடித்து விளையாடும் அனைவரும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிய வேண்டுமென்ற கனவு இருக்கும். எனக்கும் அதேதான்.
இப்போது என் கனவு நிஜமாகியுள்ளது. என்னை நம்பி அணியில் தேர்வு செய்த தேர்வுக்குழுவினர், கேப்டன், பயிற்சியாளர் மற்றும் எனது சீனியர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
என்னிடம் இந்திய அணி என்ன எதிர்பார்க்கிறதோ அதை நான் நிச்சயம் பூர்த்தி செய்வேன்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
