VIDEO: ஓபனிங் எறக்கி விட்டதுக்கு எனக்கே 'ஆப்பு' வச்சுட்டீங்களே தம்பி!... இதுதான் சொந்த காசுல சூனியமா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூர் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதில் ஹைதராபாத் அணியின் ஓபனிங் வீரர்களாக டேவிட் வார்னர், பேர்ஸ்டோ களமிறங்கினர். கேப்டனாக களமிறங்கிய வார்னர் மீது ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பு வைத்திருக்க, அவரை அநியாய முறையில் பேர்ஸ்டோ வெளியேற்றி விட்டார்.

ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்திருந்த வார்னர், 2வது ஓவரில் ரன் அவுட்டானார். உமேஷ் யாதவ் வீசிய 2-வது ஓவரில் பேர்ஸ்டோ அடித்த பந்தை உமேஷ் யாதவ் தடுக்க முயல, பந்து அவரது கையில் பட்டு ஸ்டம்பில் பட்டது. ரன் ஓடுவதற்காக க்ரீஸிலிருந்து நகர்ந்து வந்த வார்னர், உமேஷின் கையில் பட்டு பந்து ஸ்டம்பில் பட்டதால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படி அநியாயமா அவரை வெளியே அனுப்பி வச்சிட்டீங்களே? என பேர்ஸ்டோவை வச்சு செய்து வருகின்றனர். எனினும் தன்னுடைய தவறை சரி செய்வது போல அரை சதம் அடித்து அணிக்கு தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார் பேர்ஸ்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
David Warner GONE! 😅#SRHvRCB #IPL2020pic.twitter.com/zBUfyJBMVv
— FlashScore India 🇮🇳🎧 (@FlashScore_IN) September 21, 2020

மற்ற செய்திகள்
