ஒரே பந்துல 10 ரன்... தம்பி நீங்க நல்லா வரணும்! வறுத்த ரசிகர்களுக்கு 'கெத்து' பதிலடி கொடுத்த வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 21, 2020 08:48 PM

துபாயில் நடைபெற்று வரும் இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி, ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. பெங்களூர் அணி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்து வருகிறது. அந்த அணிக்கு படிக்கல், பிஞ்ச் இருவரும் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளனர். குறிப்பாக படிக்கல் வெறித்தனமாக விளையாடி அரை சதம் (56) கடந்தார்.

IPL 2020: RCB Opener Devdutt Padikkal out after making 56

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஹைதராபாத் வீரர் விஜய் சங்கர் இன்று ரசிகர்களின் கையில் சிக்கி இருக்கிறார். அவருடைய மோசமான பந்து வீச்சால் ஒரே பந்தில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து விட்டார். ஒரே பந்தில் 2 பிரீ ஹிட்கள், 2 நோ பால்கள், 1 வைடு என மொத்தம் 10 ரன்கள் பெங்களூர் அணிக்கு வாரி வழங்கினார்.

IPL 2020: RCB Opener Devdutt Padikkal out after making 56

எனினும் வெறித்தன ஆட்டம் போட்ட படிக்கல்லை கிளீன் போல்டாக்கி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்து இருக்கிறார். இதேபோல மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேன் பிஞ்சை இளம்வீரர் அபிஷேக் சர்மா பெவிலியன் அனுப்பி வைத்தார். இதையடுத்து தற்போது பெங்களூர் அணியின் சொத்து என புகழப்படும் விராட் உடன் டிவில்லியர்ஸ் கூட்டணி அமைத்து விளையாடி வருகிறார்.

பெங்களூர் அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை எடுத்துள்ளது. விராட், டிவில்லியர்ஸ் இருவரும் களத்தில் உள்ளனர்.எனினும் வெறித்தன ஆட்டம் போட்ட படிக்கல்லை கிளீன் போல்டாக்கி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்து இருக்கிறார். இதேபோல மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேன் பிஞ்சை இளம்வீரர் அபிஷேக் சர்மா பெவிலியன் அனுப்பி வைத்தார். இதையடுத்து தற்போது பெங்களூர் அணியின் சொத்து என புகழப்படும் விராட் உடன் டிவில்லியர்ஸ் கூட்டணி அமைத்து விளையாடி வருகிறார்.

பெங்களூர் அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை எடுத்துள்ளது. விராட், டிவில்லியர்ஸ் இருவரும் களத்தில் உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL 2020: RCB Opener Devdutt Padikkal out after making 56 | Sports News.