'வாய வச்சுட்டு சும்மா இருந்தா தான'... இந்திய அணியை வம்பிழுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!.. ரவுண்டு கட்டி அடித்த வசீம் ஜாஃபர்!.. செம்ம ரகளை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டி கிண்டல் செய்த மைக்கேல் வாகனுக்கு உடனடியாக பதிலடி கொடுத்து வாயடைக்க செய்துள்ளார் வசீம் ஜாஃபர்.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 2 -2 என சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், ரோகித் சர்மாவின் இந்திய அணி குறித்து கிண்டல் செய்திருந்த மைக்கேல் வாகனுக்கு, வசீம் ஜாஃபர் யாரும் எதிர்பார்க்காத பதிலடி கொடுத்துள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 -2 என சமநிலை அடைந்துள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நேற்றைய போட்டியில் இந்திய அணி சார்பாக சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்டியா, ராகுல் சஹார் மற்றும் கேப்டன்சி செய்த ரோகித் சர்மா என அனைவருமே ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்தவர்கள் ஆகும். ஆனால், இதனையே சர்ச்சையாக மாற்றியுள்ளார் மைக்கேல் வாகன்.
இதுகுறித்து, ட்வீட் செய்திருந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ரோகித் சர்மா, சூர்யகுமார், ராகுல் சஹார், பாண்டியா என மும்பை அணி வீரர்கள் நேற்றைய போட்டியில் அசத்தியதாகவும் அவர்கள்தான் இந்திய அணியின் வெற்றிக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் சூசகமாக கிண்டல் செய்திருந்தார்.
இவர் ஏற்கனவே முதல் டி20 போட்டியின் போது, மும்பை இந்தியன்ஸ் அணி, இந்திய அணியை விட சிறந்ததாக உள்ளது என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி குறித்து விமர்சிப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் தவறுவதில்லை. அந்த வகையில், நேற்று மைக்கேல் வாகனின் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்த ஜாஃபர், "உங்கள் அணியை வீழ்த்தியது இந்திய அணி அல்ல ஒரு உள்நாட்டு தொடருக்கான அணி என கூறினால், நீங்கள் அசிங்கப்படுத்துவது இந்திய அணியை அல்ல உங்கள் சொந்த அணியை தான்" என தெரிவித்துள்ளார்.
ஆட்டத்தின் இறுதிக்கட்டமான கடைசி 4 ஓவருக்கு ரோகித்திடம் கேப்டன்சியை கொடுத்துவிட்டு கோலி வெளியேறினார். ரோகித்தின் சிறந்த கேப்டன்சியால் இந்திய அணி வெற்ற பெற்றது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள மைக்கேல் வாகன், 4வது டி20 போட்டியில் கோலி சிறந்த கேப்டன்சி செய்துள்ளார். இக்கட்டான நேரத்தில் மட்டும் ரோகித் சர்மாவிடம் அணியை ஒப்படைத்து விட்டு நல்ல யுக்தி மேற்கொண்டுள்ளார் என கிண்டல் அடித்துள்ளார் என தெரிவித்துள்ளார். இதுவும் தற்போது பிரச்னையாக வெடித்துள்ளது.