பாவம் ராகுல்! இருக்குற பிரச்சினைல இது வேற... இந்திய அணிக்கு வந்த அடுத்த தலைவலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேப்டவுன்: இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒரிரு நாட்களுக்கு முன் நடைபெற்றது.
3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இந்தியாவை ஒய்ட் வாஷ் செய்து கைப்பற்றியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதற்கு முன் இரண்டாவது டெஸ்டில் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டியில் இந்தியா மண்ணைக் கவ்வியது. முதல் டெஸ்டுக்கு பிறகு நடந்த எந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற முடியவில்லை.
கேப்டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், மெதுவான ஓவர் ரேட்டைப் பெற்றதற்காக, இந்திய அணிக்கு மேட்ச் ஊதியத்தில் 40% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கள நடுவர்கள் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் பொங்கனி ஜெலே, மூன்றாவது நடுவர் அல்லாஹுதின் பலேகர் மற்றும் நான்காவது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் ஆகியோரின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் இந்த அபராதத்தை இந்திய அணிக்கு விதித்தார்.
இரு அணிகளின் போட்டி நேரம் கருத்தில் கொள்ளப்பட்ட பின்னர் இந்தியா இலக்கை விட இரண்டு ஓவர்கள் குறைவாக பந்து வீசி இருப்பது கண்டறியப்பட்டது. குறைந்தபட்ச ஓவர்-ரேட் தொடர்பான ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் வீரர்களின் ஆதரவுப் பணியாளர்களுக்கான விதி 2.22ன் படி, போட்டியில் விளையாடிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தாமதமான ஒவ்வொரு ஓவருக்கும் போட்டிக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் இதை ஒப்புக்கொண்டதால், ஐசிசி விசாரணை தேவையில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணி ஓவர்ரேட் விதிகளை மீறுவது இது இரண்டாவது முறையாகும். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி இறுதி கட்டத்தில் 49.2 ஓவர்களில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இந்தியாவை ஒய்ட் வாஷ் செய்து கைப்பற்றியது.
விராட் கோலி பேச்சை கேட்காத 2 பேர்.. தினேஷ் கார்த்திக் உடைத்த உண்மை