மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா இந்திய அணி? HOME சீரீஸ்-ல யார் யார் கூட எங்கெங்க மேட்ச் இருக்கு! முழு தகவல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை: மோசமான தென் ஆப்ரிக்க தொடருக்கு பிறகு இந்திய அணி உள்நாட்டு சீசனுக்கு தயாராக உள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதற்கு முன் இரண்டாவது டெஸ்டில் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டியில் இந்தியா மண்ணைக் கவ்வியது. முதல் டெஸ்டுக்கு பிறகு நடந்த எந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற முடியவில்லை.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி இறுதி கட்டத்தில் 49.2 ஓவர்களில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இந்தியாவை ஒய்ட் வாஷ் செய்து கைப்பற்றியது.
தென் ஆப்ரிக்க பயணத்துக்கு பின் இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கும் இடையே அடுத்த மாதம் தொடங்கவுள்ள 6 போட்டிகள் கொண்ட 20 & 50 ஓவர்கள் தொடருக்கான திருத்தப்பட்ட புதிய இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்திய சுற்றுப்பயணம் 2022 பிப்ரவரி 6 ஆம் தேதி ஒருநாள் போட்டியுடன் தொடங்க உள்ளது. 6 போட்டிகள் கொண்ட ஒயிட்-பால் தொடர் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடர்களைக் கொண்டுள்ளது.
முன்னதாக, இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் போட்டிகள் அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. மேலும், டி20 சர்வதேச போட்டிகள் முறையே கட்டாக், விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், இப்போது மைதானங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, மேலும் அனைத்து ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், டி20 போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டனிலும் நடைபெறும் என BCCI அறிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் முழுமையான அட்டவணை 2022:
1வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 6, ஞாயிறு, அகமதாபாத்
2வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 9, புதன், அகமதாபாத்
3வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 11, வெள்ளிக்கிழமை, அகமதாபாத்
1வது T20I, பிப்ரவரி 16, புதன்கிழமை, கொல்கத்தா
2வது T20I, பிப்ரவரி 18, வெள்ளி, கொல்கத்தா
3வது டி20, பிப்ரவரி 20, ஞாயிறு, கொல்கத்தா
தன்னோட இடம் பறிபோயிடும்னு ருத்ராஜ் மேல K L ராகுலுக்கு பயம்... டிவிட்டரில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
K L ராகுலின் கேப்டன் பதவி செயல்பாட்டை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!

மற்ற செய்திகள்
