'பிரமாண்ட சொகுசு அப்பார்ட்மெண்ட்டை விற்ற அபிஷேக் பச்சன்'... 'ரொம்ப எல்லாம் இல்லீங்க, எத்தனை கோடி தெரியுமா'?... காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 13, 2021 06:27 PM

நடிகை ஐஸ்வர்யா ராய் கணவரும், பிரபல நடிகருமான அபிஷேக் பச்சன் தனது பிரம்மாண்ட சொகுசு அப்பார்ட்மெண்டை விற்பனை செய்துள்ளார்.

Abhishek Bachchan offloads luxury condo in Mumbai for ₹45 crore

மும்பையின் மிகவும் காஸ்ட்லியான இடங்களில் ஒன்றான வொர்லி பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு சுமார் 7000 சதுர அடி கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கினார். ஓபராய் 360 மேற்கு என்ற பெயரில் டவர் ஏ, டவர் பி என்ற இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் 2011ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டது. டவர் ஏ என்பது 52 மாடிகளைக் கொண்ட லக்சுரி ஹோட்டல். டவர் பி என்பது 90 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு.

Abhishek Bachchan offloads luxury condo in Mumbai for ₹45 crore

இதன் உயரம் 360 மீட்டர் என்பதால் தான் குடியிருப்பிற்கு ஓபராய் 360 மேற்கு எனப் பெயரிட்டார்கள். அரபிக்கடலை நோக்கி மேற்குப் பக்கம் பார்த்தபடி அனைத்து வாசற்படிகளும் இருக்கும். இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால் இந்தியாவிலேயே உயரமான கட்டிடம் எனப் பெயர் பெறும். இந்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Abhishek Bachchan offloads luxury condo in Mumbai for ₹45 crore

இந்நிலையில் டவர் பி கட்டிடத்தின் 32வது மாடியில் 4 கார் பார்க்கிங் வசதியுடன் 2014ம் ஆண்டு 41 கோடி ரூபாய்க்கு வாங்கிய குடியிருப்பை அபிஷேக் பச்சன் தற்போது 45 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அபிஷேக் பச்சன் தனது  பிரமாண்ட சொகுசு அப்பார்ட்மெண்ட் எதற்காக விற்பனை செய்தார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Abhishek Bachchan offloads luxury condo in Mumbai for ₹45 crore | India News.