‘இதை யாருமே எதிர்பார்க்கல’.. நேத்து ‘டிரெண்ட்’டே நீங்கதான்.. எப்படி நடந்தது அந்த மேஜிக்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 05, 2020 10:34 AM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜடேஜாவுக்குப் பதில் மாற்று வீரராக களமிறங்கியது குறித்து சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.

Ten to 15 minutes before I got to know I would play, says Chahal

ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்தது. கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா 23 பந்தில் 44 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

Ten to 15 minutes before I got to know I would play, says Chahal

அப்போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் வீசிய பந்து ஜடேஜாவின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் ஜடேஜா நிலைகுலைந்தார். அந்த வலியுடனேயே ஆட்டத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய வந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் சாஹல் பீல்டிங் செய்த வந்தார்.

Ten to 15 minutes before I got to know I would play, says Chahal

அப்போதுதான் ஜடேஜாவிற்கு பதில் கன்கசன் சப்ஸ்டிடியூட் (Concussion Substitute) ஆக சாஹல் வந்துள்ளது தெரியவந்தது. ஒருநாள் போட்டியில் மோசமாக விளையாடியதால் கடைசி ஒருநாள் போட்டியில் இருந்தும், நேற்றைய முதல் டி20 போட்டியிலும் சாஹல் கழற்றி விடப்பட்டார். இந்தநிலையில் மாற்று வீரராக களமிறங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதையும் வாங்கி சாஹல் அசத்தினார்.

Ten to 15 minutes before I got to know I would play, says Chahal

இதுகுறித்து தெரிவித்த சாஹல், ‘நாங்கள் பேட்டிங் செய்த பின்னர், நான் விளையாட போகிறேன் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. போட்டி ஆரம்பிக்கும் 10, 15 நிமிடத்திற்கு முன்னர்தான் இந்த விஷயம் தெரியவந்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் செய்த சில தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் அடிக்க நமக்கு சற்று கடினமாக இருந்தது. நான் என்னுடைய திட்டப்படி பந்து வீசினேன்’ என அவர் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ten to 15 minutes before I got to know I would play, says Chahal | Sports News.