'நான் பேட்டிங் பண்றப்போ...' 'ஸ்டெம்புக்கு பின்னாடி நின்னு கே.எல். ராகுல் சொன்ன விஷயத்தை...' - என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே கான்பெர்ராவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய இளம் வீரரான கேமரூன் கிரீன் அறிமுகமானார்.
மொத்தம் 27 பந்துகளை எதிர்கொண்ட கேமரூன் கிரீன், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன், 21 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியின் முடிவில் பேசிய கேமரூன் கிரீன், களத்தில் இந்திய வீரர் கே.எல்.ராகுலுடன் ஏற்பட்ட அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் தெரிவிக்கையில், "கே.எல்.ராகுல் ஸ்டம்பிற்கு பின்புறம் நடந்து கொண்ட விதம், எனக்கு வியப்பளித்தது. நான் களமிறங்கிய போது பதட்டமாக இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டார். நான் 'ஆம்..கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது' என்றேன். அவர் உடனே 'சிறப்பாக விளையாடு இளம்வீரரே' என்றார். இந்திய அணியை பவுலிங்கின் போது சரியான எதிரணி என்று நினைத்தேன். அந்த நேரத்தில் விராட் மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தார். ஆகையால், எனக்கு கே.எல்.ராகுல் நடந்துகொண்ட விதம் வியப்பளித்தது. அதை நான் என்றும் மறக்க மாட்டேன், எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்" எனக் கூறியுள்ளார்.