வேற மாறி.. வேற மாறி.. பாண்ட்யா கேப்டனாக இருக்கும் அகமதாபாத் அணியின் புது பெயர் ‘அதிகாரப்பூர்வமாக’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அகமதாபாத் அணிக்கு புது பெயர் வைத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐபிஎல் ஏலம்
இந்த ஆண்டு நடைபெற ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான வேலைகளில் பிசிசிஐ மும்முறமாக ஈடுபட்டு வருகிறது. வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் நடைபெற உள்ளது. முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளன. அதனால் மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
புதிய அணிகள்
இதனிடையே அகமதாபாத், லக்னோ ஆகிய புதிய 2 அணிகள் இந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் லக்னோ அணியின் கேப்டனாக இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகிய 2 வீரர்களையும் லக்னோ அணி வாங்கியுள்ளது. சமீபத்தில் அந்த அணிக்கு ‘லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ்’ என பெயர் வைக்கப்பட்டது.
அகமதாபாத் அணி
இந்த நிலையில் அகமதாபாத் அணியின் புதிய பெயர் இன்று (09.02.2022) வெளியாகும் என தகவல் வெளியானது. அதற்கு முன்னதாகவே அகமதாபாத் டைட்டன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனாலும் அந்த அணியின் நிர்வாகம் இதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
புதிய பெயர்
இந்த சூழலில் அகமதாபாத் அணிக்கு ‘குஜராத் டைட்டன்ஸ்’ (Gujarat Titans) என பெயர் வைத்து இன்று அதிகாரப்பூர்வமாக் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
