DANUSHKA GUNATHILAKA : பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா ஆஸ்திரேலியாவில் கைது...! T20 WORLD CUP
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக அறியப்படும் தனுஷ்கா குணதிலகா, பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ளார்.
![Sri Lanka cricketer Danushka Gunathilaka arrested in Sydney Sri Lanka cricketer Danushka Gunathilaka arrested in Sydney](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/sri-lanka-cricketer-danushka-gunathilaka-arrested-in-sydney.jpg)
டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு காயம் ஏறட்டதன் காரணமாக, இத்தொடரில் இருந்து அவர் விலக, அவருக்கு பதிலாக பண்டாரா அணியில் இணைந்தார். ஆனால் தனுஷ்கா குணதிலகா காயம் அடைந்தாலும் தங்களது அணியுடன் ஆஸ்திரேலியாவிலேயே தங்கி இருந்தார்.
இந்த நிலையில்தான் நேற்று சிட்னியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து இன்று காலை (அக்டோபர் 6 -ஆம் தேதி) இலங்கை அணி நாடு திரும்பியது. அதே சமயம், தனுஷ்கா குணதிலகா சிட்னி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ள ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, சிட்னி போலீசாரால் இப்படி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)