"என் 'வாழ்நாள்' பூரா இத மறக்க மாட்டேன்..." 'வீடு' திரும்பியதும்... உருக்கமாக 'கங்குலி' போட்ட 'பதிவு'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி கடந்த சனிக்கிழமையன்று மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு பிறகு அவர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, ஆஞ்சியோபிளாஸ்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நேற்றைய தினமே கங்குலி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்னும் ஒரு நாள் அதிகமாக மருத்துவமனையில் இருந்த பின் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். தொடர்ந்து, சில நாட்களுக்கு கங்குலியின் வீட்டில் வைத்தே அவரை மருத்துவர்கள் கண்காணிக்கவுள்ளனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கங்குலி, தான் நலமுடன் இருப்பதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கங்குலி, தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது நெருங்கிய நண்பர் ஒருவரை குறிப்பிட்டு உருக்குமான கருத்து ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 'கடந்த 5 நாட்களில் நீ எனக்காக செய்த உதவிகள் எல்லாம் எனது வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன். உன்னை எனக்கு 40 ஆண்டுகளாக தெரியும். இது குடும்பத்திற்கு அப்பாற்பட்ட நட்பு' என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
