'கங்குலி' நடித்த விளம்பரங்கள் திடீரென 'நீக்கம்'... பின்னணியிலுள்ள பரபரப்பு 'காரணம்' என்ன??...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பிசிசிஐ அமைப்பின் தலைவரான சவுரவ் கங்குலி, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை முடிவடைந்து தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கும் கங்குலி விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. இதயத்தில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இதனை நீக்குவதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கங்குலி நடித்திருந்த சமையல் எண்ணெய் விளம்பரம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொலைக்காட்சி மற்றும் சமூகவலைத்தள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்த சமையல் எண்ணெய் விளம்பரத்தில் இதய ஆரோக்கியம் குறித்து கங்குலி பேசியிருப்பார். இந்த எண்ணெயை உபயோகித்தால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும், இதைத் தான் நானும் பயன்படுத்துகிறேன். அதனால் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றும் கங்குலி அதில் குறிப்பிட்டிருப்பார்.
ஆனால், கங்குலிக்கு தற்போது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விளம்பரம் தொடர்பாக பல மீம்ஸ்கள் கங்குலியின் உடல்நிலையை ஒப்பிட்டு வெளியாகியிருந்தது.

மற்ற செய்திகள்
