"தம்பி கோட்டுக்கு உள்ள வாங்க.. செஞ்சிட போறேன்".. SA வீரருக்கு சஹார் கொடுத்த வார்னிங்.. சேட்டையான வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்-க்கு இந்தியாவின் தீபக் சஹார் கொடுத்த வார்னிங் பலரையும் புன்னகைக்க செய்திருக்கிறது.
கடைசி போட்டி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கு இடையேயான T20 தொடர் நடைபெற்று வந்தது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய நிலையில், நேற்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இந்தூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 227 ரன்களை குவித்தது.
இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்திய அணி 178 ரன்களை மட்டுமே எடுத்து. இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வார்னிங்
இந்த போட்டியில், வித்தியாசமான சம்பவம் ஒன்றும் நடந்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸின் 16வது ஓவரில் ரிலீ ரோசோவ் ஸ்ட்ரைக்கில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அந்த ஓவரை வீசிய சஹார், நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பந்து வீசுவதற்கு முன்னரே கிரீஸை விட்டு வெளியேறுவதை சஹார் கவனித்திருக்கிறார். அப்போது டிரிஸ்டன் ஸ்டப்ஸ்-ஐ மன்கட் செய்ய முயற்சிப்பது போல சஹார் எச்சரித்தார். இதனை கண்ட சக வீரர்கள் புன்னகை செய்தனர்.
முன்னதாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இந்த தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளரான தீப்தி சர்மா, இங்கிலாந்தின் சார்லட்டை மன்கட் முறையில் அவுட் செய்தார். இதனால் அந்தப் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தென் ஆப்பிரிக்க வீரருக்கு சஹார் வார்னிங் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Kar deta mere bhai, kar deta!😂😂😂
How the whole cricket universe is aware of this since @Deepti_Sharma06 did it!!! 😂🙌🏻 pic.twitter.com/PswuAiLrY8
— Vaishnavi Iyer (@Vaishnaviiyer14) October 4, 2022