'20 லட்சம் கொடுத்து எடுத்தாங்க'... 'சுக்கு நூறாக போன கனவு'... 'அர்ஜுன் டெண்டுல்கருக்கு பதிலாக களமிறங்கப்போகும் வீரர்'... மும்பை இந்தியன்ஸ் அதிரடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு பதிலாக புதிய வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொரோனா காரணமாகப் பாதியில் நிறுத்தப்பட ஐபிஎல் போட்டிகள் தற்போது மீண்டும் களைக்கட்ட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் 2021 ஐபிஎல் சீசனின் எஞ்சியிருக்கும் போட்டிகளுக்காக அர்ஜுன் டெண்டுல்கருக்கு மாற்றாக சிமர்ஜீத் சிங்கை மும்பை இந்தியன்ஸ் சேர்த்துள்ளதாக அந்த அணி தெரிவித்துள்ளது.
ஐபிஎல் வழிகாட்டுதலின்படி கட்டாய தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் அணியுடன் பயிற்சியைத் தொடங்கியுள்ளார் என மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது. இதனால் தனது அறிமுக ஐபிஎல் போட்டியில் களமிறங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்த ஐபிஎல் சீசன் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த வீரர்களின் ஏலத்தில் அவரின் அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. ஆனால் தற்போது அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரால் இந்த சீசனில் விளையாட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். முன்னதாக சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
