"என்னடா BP எல்லாம் ஏத்துறீங்க??"... கடைசி 'இரண்டு' பந்தில் காத்திருந்த 'ட்விஸ்ட்'... அடுத்தடுத்து நடந்த எதிர்பாராத 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய இன்றைய ஐபிஎல் போட்டியில், ஆட்டம் டிரா ஆகியுள்ள நிலையில், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படவுள்ளது.
முதலில் ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் ரன் அடிக்க டெல்லி அணி திணறிக் கொண்டிருந்த நிலையில், இறுதியில் ஸ்டியோனிஸ் அதிரடியாக ஆடியதால் டெல்லி அணி சிறந்த ஸ்கோரை எட்டியது.
இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி பஞ்சாப் அணி ஆடிய நிலையில், அணியின் ஸ்கோர் 30 ரன்களாக உயர்ந்த போது அணியின் கேப்டன் ராகுல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, அஸ்வின் வீசிய முதல் ஓவரில் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து, அதிரடி ஆட்டத்தைக் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 1 ரன்னில் நடையைக் கட்டினார்.
அடுத்தபடியாக, சிறிய இடைவெளியில் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. ஆனால், 7 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கிறிஸ் ஜோர்டன் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.
இறுதி ஓவரில், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என அகர்வால் அதிரடி காட்டிய நிலையில், இறுதியில் 3 பந்துகளில் 1 ரன்கள் தேவைப்பட்டது. பஞ்சாப் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு பந்தை அகர்வால் தவற விட்டார். அடுத்த இரண்டு பந்துகளில் மீண்டும் 1 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தை எதிர்கொண்ட அகர்வால் அவுட் ஆன நிலையில், கடைசி பந்தை ஜோர்டன் எதிர்கொண்ட நிலையில், அவர் அடித்த பந்தை ரபாடா மிக அற்புதமாக கேட்ச் செய்தார். இதனால் ஆட்டம் 'டிரா' ஆனது. இதனைத் தொடர்ந்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படவுள்ளது.