பரபரப்பிலாமல் நடந்த சூப்பர் 'ஓவர்'... 'அசால்ட்'டாக ஆடி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த 'டெல்லி' அணி!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய இன்றைய ஐபிஎல் போட்டியில், ஆட்டம் டிரா ஆன நிலையில், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படவுள்ளது.

முன்னதாக, முதலில் ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 ஆவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும் விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் டிரா ஆனது.
தொடர்ந்து, சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி, வெறும் 2 ரன் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. அதன் பின்னர் ஆடிய டெல்லி அணி, 3 ரன்கள் என்ற எளிதான இலக்கை இரண்டாவது பந்திலேயே எட்டி வெற்றியுடன் 13 ஆவது ஐபிஎல் தொடரை ஆரம்பித்துள்ளது.
மறுபக்கம், பஞ்சாப் அணி வீரர் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், நூலிழையில் பஞ்சாப் அணி வெற்றியை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
