'பானிபூரி' வித்துக்கிட்டிருந்த 'பையன்'... 'ஐபிஎல்'ல 'மாஸ்' காட்ட 'வெயிட்டிங்'... சீறிப் பாயத் தயாராகும் '18' வயசு 'சிங்கக்குட்டி'... யார் இந்த ஜெய்ஸ்வால்'??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைப்பெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

முன்னதாக, தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணியின் 20 வயது இளம் வீரர் தேவ்தத் படிக்கல் தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இனிவரும் போட்டிகளிலும், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) என்ற 18 வயதேயான இளம் வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐபிஎல் ஏலத்தில் 2.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், முன்னதாக நடைபெற்ற under 19 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். மும்பையில் பானிபூரி விற்றுக் கொண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், தனது திறமை மூலம் under 19 உலக கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருது வரை வென்றுள்ளார்.
இதன் காரணமாக, இன்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஆடும் லெவனில் ஜெய்ஸ்வால் இடம்பெற்றால் அவர் தனது திறமையை நிரூபிக்க நிச்சயம் இது ஒரு வாய்ப்பாக அமையும். அதுவும் முதல் போட்டியிலேயே பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக மோதுவதால், ஜெய்ஸ்வால் மீது அதிக கவனம் திரும்ப வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்
