மைதானத்தில்.. திடீரென அதிர்ச்சியில் உறைந்த சச்சின் மகள்.. வைரலாகும் புகைப்படம்.. 'பின்னணி' என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று (18.05.2022) நடந்த ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி இருந்தது.

ஒருபுறம் பிளே ஆப் வாய்ப்பினை இழந்த மும்பை அணியும், மறுபக்கம் சற்று வாய்ப்புள்ள ஹைதராபாத் அணியும் களமிறங்கி இருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக, ராகுல் திரிபாதி 76 ரன்கள் எடுத்திருந்தார்.
அசத்திய டிம் டேவிட்
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நல்லதொரு தொடக்கத்தை அமைத்தது. ஆனாலும், நடுவே சில விக்கெட்டுகள் விழுந்ததால் சற்று தடுமாற்றம் கண்டது. இதனையடுத்து, கடைசி மூன்று ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு, 44 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நடராஜன் வீசிய ஓவரில், மொத்தம் 4 சிக்ஸர்களை பறக்க விட்டார் டிம் டேவிட்.
தேவை இல்லாத அவுட்
இதனால், மும்பை அணியின் வெற்றி வாய்ப்பு எளிதாவது போல இருந்தது. ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தியில் தேவையில்லாமல் ரன் அவுட்டானார் டிம் டேவிட். தொடர்ந்து, 19 ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் மெய்டன் விக்கெட்டாக மாற்ற, கடைசி ஓவரில், மும்பை அணி 15 ரன்கள் எடுத்தும், 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சாரா டெண்டுல்கர் கொடுத்த ரியாக்ஷன்
இந்த தோல்வியின் காரணமாக, தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள், மைதானத்தில் மனம் உடைந்து காணப்பட்ட சம்பவம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. டிம் டேவிட் சிக்ஸர்களை பறக்க விட்ட போது, மும்பையின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
ஆனால், அதே ஓவரில் துரதிர்ஷ்டவசமாக டிம் டேவிட் ரன் அவுட்டாக, மும்பை அணியின் ரசிகர்கள் தகர்ந்து போயினர். அந்த சமயத்தில், மைதானத்தில் மும்பை ஜெர்சி அணிந்து கொண்டிருந்த சாரா டெண்டுல்கர், வாயை பொத்திய படி, மனமுடைந்த வகையில் வேதனையுடன் காணப்பட்டார்.
இது தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், மும்பை ரசிகர்களும் இதனை பகிர்ந்து வெற்றி வாய்ப்பை கடைசி கட்டத்தில் தவற விட்டது பற்றி, வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
