"என்ன பாஸ் நீங்க.. 'டாஸ்' போடுற நேரத்துல இத எல்லாமா மறப்பீங்க??.." முழித்துக் கொண்டே நின்ற 'சாம்சன்'.. வைரலாகும் 'சம்பவம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இந்த சீசனில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் (Sanju Samson) நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் அணியின் முதல் இரண்டு போட்டிகளின் டாஸ் சமயத்தில், டாஸ் போட்ட பிறகு, அந்த நாணயத்தை எடுத்த சாம்சன், அதனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரலாகி இருந்தது. இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியிலும், டாஸ் சமயத்தில், சாம்சன் செய்த வேடிக்கையான செயல் ஒன்று, அதிகம் வைரலாகி வருகிறது.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. ஷ்ரேயாஸ் கோபாலுக்கு பதிலாக உனத்கட்டும், வோஹ்ராவுக்கு பதிலாக ஜெய்ஸ்வலும் களமிறங்கினர். இந்த போட்டியில், டாஸ் வென்ற சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்த நிலையில், தனது அணியிலான மாற்றங்கள் குறித்து, பேச முற்பட்டார். அப்போது, உனத்கட் பெயரை சொன்ன சாம்சன், இன்னொரு மாற்றம் யார் என்பதை மறந்து விட்டார்.
இதனால், சில நொடிகள் மறந்து விட்டு முழித்துக் கொண்டே சிரித்த சாம்சன், அதன் பிறகு ஜெய்ஸ்வல் களமிறங்குவதை நினைவு கூர்ந்தார். இது தொடர்பான நிகழ்வுகள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எட்டிப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
