‘WTC FINAL-லையும் இப்படிதான் இருக்கும்’!.. ஐபிஎல் அப்பவே ரோஹித்துக்கு ‘வார்னிங்’ கொடுத்த போல்ட்.. வெளியான சுவாரஸ்ய தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின்போது ரோஹித் ஷர்மாவுக்கு நியூஸிலாந்து வீரர் ட்ரென்ட் போல்ட் விளையாட்டாக வார்னிங் கொடுத்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு அணிகள் மோதவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (18.06.2021) இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இரு அணிகளும், அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இப்போட்டியில், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக விளையாடி வரும் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா மற்றும் நியூஸிலாந்து வீரர் ட்ரென்ட் போல்ட் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
இந்த நிலையில் Star Sports சேனலுக்கு பேட்டியளித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருக்கும் நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட், ரோஹித் ஷர்மா மற்றும் ட்ரென்ட் போல்ட் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அதில், ‘இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக இருவரும் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ட்ரென்ட் போல்ட் வீசிய சில பந்துகள் ரோஹித் ஷர்மாவின் ஹெல்மட்டில் அடித்தது. மேலும் ஸ்விங்கான பல பந்துகளை ரோஹித் ஷர்மாவால் விளையாட முடியவில்லை.
அப்போது ரோஹித் ஷர்மாவிடம் சென்ற டிரென்ட் போல்ட், இதேமாதிரிதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிலும் இருக்கும் என நகைச்சுவையாக வார்னிங் கொடுத்தார். உடனே சிரித்துக் கொண்டே ரோஹித் ஷர்மா பயிற்சியை தொடர்ந்தார்’ என ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பேட்டி ஒன்றில் கூறிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், இந்த இறுதிப்போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் டிரென்ட் போல்டுக்கு இடையையில்தான் அதிக போட்டி நிலவப் போகிறது. இதை பார்க்க தான் ஆவலுடன் காத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.