“இவங்க இரண்டு பேர ஓபனிங்’ல இறக்கி விடுங்க’… ’அப்புறம் பாருங்க மேட்ச் எப்படி போகுதுன்னு…!” - நியூசிலாந்துக்கு எதிரான WTC மேட்ச்சுக்கு யுவராஜ் சிங் போட்ட கணக்கு...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam J | Jun 10, 2021 05:08 PM

ஜூன் 16 முதல் நியூசிலாந்திற்கு எதிரான ஐ.சி.சி (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய வீரர்கள் தயாராகி கொண்டியருகின்றனர். இந்த நேரத்தில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது.இதனை தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் சேர்ந்து தொடங்குவார்கள் என்று செய்தி வந்தது.

yuvaraj singh gives his idea for indian team about openners

நியூசிலாந்திற்கு எதிரான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஜோடி இணைந்ததை ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆதரித்துள்ளார்.

சவுத்தாம்ப்டனில் நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய சோதனை காத்திருக்கிறது. அந்த பிட்ச்சின்  நிலைமைகள் இந்திய வீரர்களுக்கு குறிப்பாக தொடக்க வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைகின்றன. இந்த போட்டிக்கு இந்தியா இந்த  இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் தனது விருப்பத்தை வழங்கியுள்ளார்.

சுப்மான் கில், ரோகித் சர்மா, மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் போன்றவர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்ய விருப்பங்கள் இருந்தன. ரோகித் ஸ்விங் பந்துக்கு அதிகம் சோதிக்கப்படவில்லை என்றாலும்,ஹிட்மேன் ரோகித், கில்லுடன் இருக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் கருதுகிறார்.

பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக (Border Gavasker Trophy) இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது ரோகித் மற்றும் கில் ஆகியோர் முதல் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவருக்கொருவர் ஜோடி சேர்ந்தனர். இந்த தொடரில் இருந்து அவர் விளையாடிய போட்டிகளில் மயங்க் நன்றாக  விலையடியருந்தலும், ரோஹித்-கில் ஜோடி தொடர்ந்து இருப்பதே சரியாக இருக்கும்.

ரோகித் சர்மா இப்போது டெஸ்ட் போட்டிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார் ஒரு தொடக்க வீரராக அவர் கிட்டத்தட்ட 7 சதங்களை அடித்துள்ளார். ஆனால் ரோகித் மற்றும் சுப்மான் கில் இருவரும் இங்கிலாந்தில் இதுவரை விளையாடியது இல்லை. அவர்களுக்கு என்ன சவால்கள் இருக்கிறது என்று தெரியும், அவர்கள் விரைவாக நிலைமைகளுடன் பழக வேண்டும் என்றும் தந்திரமான நிலைமைகளைக் கையாள்வதில் முக்கியமான ஆலோசனைகளை யுவராஜ் வழங்கினர், முதல் இன்னிங்ஸ் விளையாடுவது மிகவும் முக்கியமானது என்றும், இரண்டாவது இன்னிங்ஸ் கொஞ்சம் ஈஸியாக இருக்கும் என்றும், இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் ஒரு இன்னிங்ஸ் எடுப்பது முக்கியம். காலையில், பந்து ஸ்விங் ஆகும் மற்றும் மதியம் நீங்கள் ரன்கள் எடுக்கலாம், டீக்குப் பிறகு, பந்து மீண்டும் ஸ்விங் ஆகும். ஒரு பேட்ஸ்மேன் என்ற முறையில், இந்த விஷயங்களுக்கு ஏற்றவாறு நீங்கள் விளையாடினால் வெற்றிபெற முடியும் என்று யுவராஜ் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Yuvaraj singh gives his idea for indian team about openners | Sports News.