VIDEO: அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கணும்.. ரன் அவுட்டில் இருந்து நேக்கா எஸ்கேப் ஆன வார்னர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் டேவிட் வார்னர் ரன் அவுட்டில் இருந்து தப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஹப்பா மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 39 ரன்களும், ஒல்லி போப் 35 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கேமரூன் கிரீன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 343 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய இழுந்துள்ளது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 112 ரன்களும், டேவிட் வார்னர் 94 ரன்களும், மார்னஸ் லாபுசாக்னே 74 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் டேவிட் வார்னர் ரன் அவுட்டில் இருந்து தப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் போட்டியில் 37-வது ஓவரை இங்கிலாந்து அணியின் மார்க் வுட் வீசினார். அந்த ஓவரில் அருகில் தட்டி விட்டு வார்னர் ரன் ஓட முயன்றார். ஆனால் பந்து நேராக லெக் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஹமீத்திடம் சென்றது. இதனை பார்த்த வார்னர் உடனே கிரீஸுக்குள் செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் ஹமீத் அவர் ரன் அவுட் செய்ய முயன்றார்.
A comedy of errors! 🙃 Warner survives #Ashes pic.twitter.com/zq6oxRxG0s
— cricket.com.au (@cricketcomau) December 9, 2021
அப்போது பேட்டை தூக்கி கிரீசில் வைக்கும்போது வார்னரின் கை நழுவி பேட் கீழே விழுந்து விட்டது. அந்த சமயம் ஹமீத் வீசிய பந்து ஸ்டம்பில் படாமல் சென்றது. உடனே சுதாரித்துக்கொண்ட வார்னர் வேகமாக கையால் க்ரீஸை தொட்டு தொட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.