‘அவரு 32, நீங்க 27’!.. தோனியின் டெஸ்ட் ‘ரெக்கார்டை’ முறியடித்த ரிஷப் பந்த்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தோனியின் சாதனையை இளம்வீரர் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று ஹப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி வெற்றி பெற 328 ரன்களை இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் சுப்மன் கில் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து வந்த கேப்டன் ரஹானே 24 ரன்களில் அவுட்டாக, அடுத்ததாக களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், 2 ரன்கள் அடித்த போது டெஸ்ட் போட்டியில் 1000 ரன்களை கடந்தார்.
1000 Test runs for Rishabh Pant 👏
He is the quickest Indian wicket-keeper to achieve the milestone, in 27 innings!#AUSvIND pic.twitter.com/dk2Fa3stBS
— ICC (@ICC) January 19, 2021
இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை 32 இன்னிங்களில் தோனி படைத்திருந்தார். இந்த சாதனையை 27 இன்னிங்ஸ்களில் கடந்து ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.

மற்ற செய்திகள்
