கருப்பு உடையில் கூலான டான்ஸ்.. HUBBY-யோட டீம் விக்கெட் எடுத்ததும் ஆட்டம் போட்ட மனைவி.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில் இன்று (23.04.2022) நடைபெற்ற முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி ஆடிய குஜராத் அணியில், தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா தனியாளாக ஆடி 67 ரன்கள் எடுத்திருந்தார்.
பயம் காட்டிய ரசல்..
20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது குஜராத். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், குஜராத் அணியின் கையே அதிகம் ஓங்கி இருந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் ரசல் அதிரடி காட்ட, போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற விறுவிறுப்பு உருவானது.
கடைசி ஓவரில், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அல்சாரி ஜோசப் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தினை சிக்சருக்கு விரட்டினார் ரசல். இதனால், கொல்கத்தா ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், அடுத்த பந்திலேயே ரசல் அவுட்டாக, மீதமுள்ள பந்துகளில் 3 ரன்களை மட்டுமே கொல்கத்தா அணி எடுத்திருந்தது.
புள்ளிப் பட்டியலில் முதலிடம்
இதனால், குஜராத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தங்களின் 6 ஆவது வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் தலைமையை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், போட்டிக்கு மத்தியில் மைதானத்தில் இருந்த ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா, குஜராத் அணி எடுத்த விக்கெட்டை கொண்டாடிய வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
குஜராத் அணியின் போட்டியை பார்க்க, நடாஷா மைதானத்திற்கு வந்திருந்தார். அப்போது, குஜராத் வீரர் முகமது ஷமி, நரைன் விக்கெட்டை எடுத்ததும், அங்கிருந்த நடாஷா, திடீரென கொண்டாடத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இதற்காக, ஜாலியாக அவர் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
— Peep (@Peep_at_me) April 23, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு….
https://www.behindwoods.com/bgm8/