Oh My Dog
Anantham

"ஷ்ரேயாஸ் மட்டும் என் PROPOSAL'அ ஏத்துக்கிட்டா.. என் பெயரை கூட.." டிரெண்ட் ஆகும் ரசிகையின் பதாகை..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Apr 23, 2022 06:54 PM

நடப்பு ஐபிஎல் தொடரில், இன்று இரண்டு போட்டிகள் உள்ள நிலையில், இதன் முதல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தற்போது மோதி வருகின்றன.

Fan girl proposal to kkr captain shreyas iyer gone viral

அடுத்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மீண்டும் 50 போட்ட ஹர்திக்

நடப்பு ஐபிஎல் சீசனில், டாஸ் வென்ற கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்வது இது தான் முதல் முறை. தொடர்ந்து, பேட்டிங் இறங்கிய குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா தனியாளாக ஆடி ரன் சேர்த்தார். அது மட்டுமில்லாமல், தொடர்ச்சியாக தனது மூன்றாவது அரை சதத்தையும் பதிவு செய்துள்ளார். அவர் 67 ரன்கள் எடுத்து அவுட்டாக, தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது.

Fan girl proposal to kkr captain shreyas iyer gone viral

பெண் ரசிகை கொண்டு வந்த பதாகை

அதிலும் குறிப்பாக, கடைசி ஓவரில் நான்கு விக்கெட்டுகளை குஜராத் அணி இழந்திருந்தது. இறுதியில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்களை குஜராத் அணி எடுத்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வரு கொல்கத்தா அணி, தொடக்க விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தவித்தது. இலக்கை நோக்கி மெதுவாக கொல்கத்தா அணி ஆடி வரும் நிலையில், போட்டியை பார்க்க வந்த பெண் ரசிகை ஒருவர் கொண்டு வந்த பேனர் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Fan girl proposal to kkr captain shreyas iyer gone viral

என் பெயரையே மாத்திக்குறேன்..

அந்த ரசிகை கொண்டு வந்த பதாகையில், "ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் எனது காதலை ஏற்றுக் கொண்டால், நான் என்னுடைய பெயரை பபிதா ஜி என மாற்றிக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தினை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ட்வீட்டின் கீழ், ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Fan girl proposal to kkr captain shreyas iyer gone viral

இதற்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி ஆடிய போது, ஒரு ரசிகை பதாகை ஒன்றுடன் வந்திருந்தார். அதில், "எனது தாய் மாப்பிள்ளையை தேடுமாறு என்னிடம் கூறி விட்டார். எனவே, நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா ஷ்ரேயாஸ் ஐயர்?" என குறிப்பிட்டிருந்தார்.

அதே போல, மீண்டும் ஒரு ரசிகை, ஷ்ரேயாஸ் ஐயருக்கு காதல் வலை வீசும் வகையில் கொண்டு வந்துள்ள பதாகை, அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது. தொடர்ச்சியாக, ஷ்ரேயாஸ் ஐயருக்கு வரும் காதல் Propose பற்றியும் ரசிகர்கலள் தங்களின் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு….

https://www.behindwoods.com/bgm8/

Tags : #SHREYAS IYER #KKR #IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fan girl proposal to kkr captain shreyas iyer gone viral | Sports News.