"தோனி அடிச்ச அடி இன்னும் கண்ணு முன்னால நிக்குது.. அதுக்குள்ள அடுத்ததா??.." மும்பை அணிக்கு வந்த 'சோதனை'..
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடரின் 33 ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது.
டாஸ் வென்று ஃபீல்டிங்கை சென்னை அணி தேர்வு செய்ய, அதன்படி ஆடிய மும்பை அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தது.
இருந்தாலும், திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிடோர், ஓரளவுக்கு சிறந்த முறையில் ரன் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களை மும்பை அணி எடுத்திருந்தது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி ஓரளவுக்கு தடுமாறினாலும், கடைசியில் தோனியின் பினிஷிங் ஸ்டைலால் அசாத்திய வெற்றியை பெற்றிருந்தது. கடைசி 4 பந்துகளில், சென்னை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது.
மீண்டும் பினிஷ் செய்த தோனி
சிஎஸ்கேவின் வெற்றிக்கு ஒரு கடினமான சூழல் இருந்தாலும், தோனி களத்தில் இருந்ததால், ஓரளவுக்கு சிஎஸ்கே ரசிகர்களிடம் நம்பிக்கை இருந்தது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், மேஜிக் செய்த தோனி, அந்த நான்கு பந்துகளில் முறையே, 6, 4, 2, 4 என அடித்து, சென்னை அணி ஒரு த்ரில் வெற்றியை பெற உதவி இருந்தார்.
மும்பையின் மோசமான சாதனை
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகள் ஆடியுள்ள சிஎஸ்கே, தங்களின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலை, மிகவும் மோசமாக உள்ளது. நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகள் ஆடியுள்ள மும்பை இந்தியன்ஸ், 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
முந்தைய சில சீசன்களில், 4 முதல் 5 போட்டிகள் ஆரம்பத்தில் தோல்வி அடைந்து, பின்னர் மும்பை அணி மீண்டு வந்த கதை உண்டு. ஆனால், இந்த முறை ஒரு வெற்றியை பதிவு செய்யக் கூட, கடும் தடுமாற்றத்தை மும்பை அணி சந்தித்து வருகிறது. அது மட்டுமில்லாமல், தற்போது வேறொரு மோசமான பெயரும் மும்பை அணிக்கு கிடைத்துள்ளது.
7 போட்டிகளில் தோல்வி
அதாவது ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 7 போட்டிகளில், எந்த அணிகளும் தோல்வி அடைந்தது கிடையாது. இதற்கு முன்பாக, டெல்லி (2013) மற்றும் பெங்களூர் (2019) ஆகிய அணிகள், ஐபிஎல் தொடரின் முதல் ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்ததே அதிகமாக இருந்தது. அந்த மோசமான சாதனையை இந்த சீசனில் சமன் செய்த மும்பை, தற்போது சென்னை அணிக்கு எதிரான தோல்வியால் அதனை தாண்டியுள்ளது.
இதன் காரணமாக, ஒரு ஐபிஎல் சீசனின் முதல் 7 போட்டிகளில் தோல்வி அடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது. அதே போல, பிளே ஆப் சுற்று செல்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்கும் மங்கி போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு… https://www.behindwoods.com/bgm8/