சிஎஸ்கே ட்வீட்டில் ஜடேஜா போட்ட கமெண்ட்.. 4 மாசத்துக்கு பிறகு.. திடீர்ன்னு இப்போ நடந்த மாற்றம்??.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, டி 20 தொடரை ஆடி வருகிறது.
முன்னதாக நடந்த ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருந்த இந்திய அணி, டி 20 தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ளதால், இந்திய அணியில் சீனியர்கள் மற்றும் இளம் வீரர்கள் உள்ளிட்ட பலருக்கும் அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடி வருகிறார்.
இதற்கு மத்தியில், சிஎஸ்கே தொடர்பான பதிவு ஒன்றை ரவீந்திர ஜடேஜா நீக்கி உள்ளது தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நான்கு வெற்றிகளை மட்டுமே எடுத்து, புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்துடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது.
இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக, சிஎஸ்கேவின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக, ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையில் சிஎஸ்கே அணி ஆடி வந்த நிலையில், தொடரின் பாதியில், ஜடேஜா கேப்டன் பகுதியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால், மீண்டும் தோனியே சிஎஸ்கே அணிக்கு தலைமை தாங்கி இருந்தார்.
ஐபிஎல் தொடருக்கு பிறகு, சர்வதேச போட்டிகளில் ஜடேஜா தொடர்ந்து ஆடி வரும் நிலையில், கடந்த மாதம், சிஎஸ்கே தொடர்பான தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளை ஜடேஜா நீக்கி இருந்தது, அதிகம் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போதும் அப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார் ரவிந்திர ஜடேஜா.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம், பத்து ஆண்டுகள் சிஎஸ்கேவில் ஜடேஜா ஆடியதை குறிப்பிட்டு, "10 years of super jaddu" என குறிப்பிட்டு சிஎஸ்கே அணி, ட்விட்டரில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தது. இந்த பதிவில் கமெண்ட் செய்த ஜடேஜா, "இன்னும் பத்து ஆண்டுகள் இருக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.
அப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பதிவில், அவர் கமெண்ட் செய்திருந்த அந்த வார்த்தையை தான் தற்போது ஜடேஜா நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணியில், தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆடுவேன் என்ற தனது கமெண்ட் ஒன்றை தற்போது ஜடேஜா நீக்கி உள்ளதாக வெளிவரும் தகவல், சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.