“ஏறுனதுமே இப்படி இருக்கு.. பிரார்த்தனை பண்ணிக்கங்கனு சொன்னா!” - கடலில் விழுந்த விமான பயணிகளின் உறவினர்களின் கதறல் ஓலம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்ரீவிஜயா ஏர் விமான சேவை நிறுவனத்தின் விமானம் சமீபத்தில் 62 பயணிகளுடன் மாயமானது.
இந்தோனேசியாவில் கடலில் விழுந்து மாயமான இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் பயணிகளின் குடும்பத்தில் உள்ளவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Black boxes founded in Indonesia 737 news 👇#Indonesian authorities located the black boxes of the #SriwijayaAir jet that crashed into the #sea soon after taking off from the capital #Jakarta.
Courtesy @Reuters#planecrash #RIP #Indonesia #IndonesiaPlaneCrash ✈ pic.twitter.com/VvhE7s7l7v
— Mian Khurram Shahzad 🇵🇰 (@mksw85official) January 10, 2021
பலரும் தங்கள் சொந்தங்கள் பத்திரமாக திரும்பி வருவார்கள் என பிரார்த்தனை செய்கின்றனர். ஜகார்த்தாவில் இருந்து கடந்த சனிக்கிழமை அன்று இந்த விமானம் புறப்பட்டது. அப்போது விமான பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் இதில் பயணித்தனர். போண்டியானக் தீவை நோக்கி சென்ற இந்த விமானம் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்தது. இந்த கோர விபத்து உலகையே உலுக்கியுள்ளது.
ஆனாலும் இந்த அதிபயங்கர விபத்தில் பலரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் மட்டும் தற்போது கிடைத்துள்ளன. ஆனால் இந்த விமானமோ, பயணிகளோ என்ன ஆனார்கள் என தெரியவில்லை. விமானம் பயணிகளுடன் கடலில் விழுந்து மாயமானதை இந்தோனேசிய அதிபர் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் தான், விமானத்தில் பயணிகளின் உறவினர்கள் சில தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அவை நெஞ்சை உருக்கும் அளவுக்கு சோகம் நிறைந்துள்ளன.
கடலில் விழுந்து மாயமான இந்த விமானத்தின் கேப்டன் தான் 54 வயதான அஃப்வான். அவருடைய உறவினர் ஃபெர்சா மஹர்திகா என்பவர் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார். மேலும் தமது மாமாவுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார். கடலில் விழுந்த ஸ்ரீ விஜயா ஏர் விமானமான எஸ்.ஜே.182-ன் கேப்டன் அஃப்வான் சனிக்கிழமை அன்று வீட்டில் இருந்து வழக்கம் போல வேலைக்கு கிளம்பினார்.
எனினும் சீக்கிரமே கிளம்பியிருக்கிறார். எப்போதும் நேர்த்தியாக உடை அணிந்துகொண்டு டிப்டாப்பாக செல்வார். அன்று தமது 3 குழந்தைகளை விட்டு பணிக்கு சென்றதால் அவர்களிடம் வருந்தியுள்ளார். 1987ல் கமர்ஷியல் விமானியாக மாறிய அஃப்வான் மிகவும் மனித நேயம் மிக்கவர் என்கின்றனர் அவரை தெரிந்தவர்கள்.
இதே விமானத்தில் முதலாளியின் அழைப்பை ஏற்று கப்பல் பணி தொடர்பாக சென்றவர் அங்கா ஃபெர்னான்டா அஃப்ரியான். 29 வயது இளைஞரான இவர் எப்போதும் கப்பலில் தான் பயணிப்பார். அரிதாகவே விமானத்தில் பயணிப்பார். இப்போது தான் ஒரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். குழந்தையின் எதிர்காலத்துக்காக நிறைய உழைக்க வேண்டும் என கூறிவந்துள்ளார் அஃப்ரியான். அவரது குடும்பம் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதே எதிர்பார்ப்பில் சுமத்ரா தீவில் இருந்து சீருடையில் இருக்கும் மகனை புகைப் படத்தை கையில் வைத்தபடி இவ்வாறு தெரிவித்துள்ளார் அவருடைய தாயார் அஃப்ரிடா.
பிரசவத்துக்காக வீட்டுக்கு வந்த உறவுகளை பற்றி உஸ்ரிலானிட்டா என்பவர் பேசியுள்ளார். தன் மகள் இந்தா ஹலிமா, மருமகன் மொஹம்மத் ரிஸ்கி , பேரக்குழந்தை ஆகியோர் குழந்தை பிறப்புக்காக வீட்டுக்கு வந்து இருந்துள்ளனர். அவர்களை பிரிந்து தவிப்பதாக இப்போது உஸ்ரிலானிட்டா தெரிவித்துள்ளார். எஸ்.ஜே.182 விமானம் கடலில் விழுந்தது எனும் செய்தியைக் கேட்டதுமே மயங்கி விழுந்துள்ளார் உஸ்ரிலானிட்டா.
விமானம் ஏறியதுமே மகள் இந்தா ஹலிமா, பயணத்துக்கு முன்பாக, இறக்கை பகுதியை போட்டோ எடுத்து, வாட்ஸ் ஆப்பில், “மழை கொஞ்சம் அதிகம்தான். பிரார்த்தனை பண்ணிக்கங்க!” என செய்தி அனுப்பியதாக உஸ்ரிலானிட்டா தெரிவித்து அழுகிறார். இதனிடையே உறவினர்களின் டி.என்.ஏ உதவியுடன் மாயம் ஆன பயணிகளை கண்டு பிடிக்கும் பணியும் தொடங்கப் பட்டுள்ளது.