VIDEO: குமுதா ‘ஹேப்பி’ அண்ணாச்சி.. பறந்து வந்த ‘FLYING KISS’.. இப்போ ‘அவரும்’ ஹேப்பி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 25, 2020 01:02 AM

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ஃப்ளையிங் கிஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Preity Zinta flying kiss To KL Rahul after winning against SRH

ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டி இன்று (24.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 32 ரன்கள் எடுத்தார்.

Preity Zinta flying kiss To KL Rahul after winning against SRH

இதனை அடுத்து 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 19.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Preity Zinta flying kiss To KL Rahul after winning against SRH

இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் இவர்கள் இருவரும் அவுட்டானதும் மனிஷ் பாண்டே மற்றும் அப்துல் சமத் அவுட்டாகினர்.

Preity Zinta flying kiss To KL Rahul after winning against SRH

இதனை அடுத்து களமிறங்கி விஜய் சங்கர் (26 ரன்கள்) அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இதனால் வெற்றி பெரும் சூழ்நிலையில் ஹைதராபாத் அணி இருந்தது. அப்போது திடீரென விஜய் சங்கரும் அவுட்டாக, அடுத்த வந்த ரஷித் கான், ப்ரியம் கார்க், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேற ஹைதராபாத் அணி படுதோல்வியை சந்தித்தது.

Preity Zinta flying kiss To KL Rahul after winning against SRH

ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த பஞ்சாப் அணியின் கேப்டன் கேல்.எல்.ராகுல், இரண்டாம் பாதியில் பெற்று வரும் அடுத்தடுத்த வெற்றிகளால் தற்போதுதான் அவரை சிரித்த முகத்துடன் பார்க்க முடிவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கேப்டன் ராகுல் மற்றும் அணி வீரர்களை நோக்கி அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Preity Zinta flying kiss To KL Rahul after winning against SRH | Sports News.