உங்களுக்கு இனி நான் கோச் இல்ல.. முக்கிய மேட்ச்க்கு முன் பயிற்சியாளர் ராஜினாமா.. மொத்தமாக விழுந்த இடி .. திணறும் கிரிக்கெட் டீம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடாகா: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஷ்வெல் பிரின்ஸ், எதிர்வரும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
வங்காளதேச அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் , மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றைக் கொண்டது. இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானம், செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க், டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் உள்ளிட்ட நான்கு மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சுற்றுப்பயணம் மார்ச்-ஏப்ரல் வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜூலை 2021 இல், பிரின்ஸ் பங்களாதேஷ் அணியின் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். ஆரம்பத்தில், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்காக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தால் அவருக்கு குறுகிய கால ஒப்பந்தம் மட்டுமே வழங்கப்பட்டது, ஆனால் பின்னர் அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு அணியில் அவருக்கு நிரந்தர பயிற்சியாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. மேலும், அவரது ஒப்பந்தம் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரை இருந்தது.
இந்நிலையில் தனது பயிற்சியாளர் பதவியை பிரின்ஸ் ராஜினாமா செய்துள்ளார். அஷ்வெல் பிரின்ஸ் தனது பொறுப்பில் இருந்து விலகுவதற்கு காரணமாக குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டி இருப்பதால் ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் பிரின்ஸ், மெலிசா கிஸ்டென்சாமியை திருமணம் செய்தார் இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
44 வயதான பிரின்ஸ் பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு பெரிய பங்களிப்புகளை செய்துள்ளார் இவர் புதிய இளம் பேட்ஸ்மேன்களை உருவாக்க அணிக்கு உதவியுள்ளார். இவரது வழிகாட்டுதலின் கீழ், இளம் பங்களாதேஷ் அணி நியூசிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் நியுசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
பேட்டிங் பயிற்சியாளர் ஆஷ்வெல் பிரின்ஸ்க்கு முன் பங்களாதேஷின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சனும் கடந்த மாதம் தனது பதவியில் இருந்து விலகி, இங்கிலீஷ் கவுண்டி சாம்பியன்ஷிப் அணியான யார்க்ஷயர் அணிக்கு தலைமை பயிற்சியாளராக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.