"பிட்ச் நடுவுல சுத்தியல வெச்சு என்ன பண்ணிட்டு இருக்காரு??.." பரபரப்பை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய கேப்டன்.. வைரல் சம்பவம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபல ஆண்டுகளுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இதன் முதல் போட்டி, டிராவில் முடிந்திருந்த நிலையில், தற்போது நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியும் பல்வேறு விறுவிறுப்புகளுக்கு மத்தியில் டிராவில் முடிந்துள்ளது.
முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டிக்கு வேண்டி அமைக்கப்பட்டிருந்த பிட்ச் பற்றி, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மற்றும் சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கூட, பாகிஸ்தான் அணி நிர்வாகத்தினை விமர்சனம் செய்திருந்தனர்.
பிட்ச் சரியில்ல
இதற்கு காரணம், முழுக்க முழுக்க ஐந்து நாட்களும் பேட்டிங்கிற்கு மட்டுமே சாதகமாக பிட்ச் அமைந்திருந்தது தான். இரண்டாவது இன்னிங்ஸில், பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, ஒரு விக்கெட்டை கூட இழக்காமல், 252 ரன்கள் எடுத்திருந்தது. கொஞ்சம் கூட பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் பிட்ச் ஒத்துழைக்கவில்லை என பலரும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
கடின இலக்கு
தொடர்ந்து, தற்போது நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 556 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருந்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, 148 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருந்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 97 ரன்கள் மட்டுமே எடுத்து டிக்ளேர் செய்ய, பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வேற லெவல் ஆட்டம்
சுமார் 170 ஓவர்கள் மீதமிருக்க, சவாலுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சிறப்பாக பேட்டிங் செய்திருந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், 196 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி சில விக்கெட்டுகளை எடுத்தாலும், 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆட்டம் இருந்தும், விக்கெட்டுகளை இழக்காமல் ஆடியிருந்த பாகிஸ்தான் அணியின் ஆட்டம், பல கிரிக்கெட் பிரபலங்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புகாரளித்த ஆஸ்திரேலிய வீரர்கள்
இதனிடையே, இந்த டெஸ்ட் போட்டிக்கு மத்தியில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்த செயல், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணி பந்து வீசிக் கொண்டிருந்த போது, பந்து வீச்சாளர்கள் கால் பதிக்கும் இடத்தில், ஆடுகளம் சரியாக இல்லை என ஆஸ்திரேலிய வீரர்கள் புகார் செய்தனர்.
சுத்தியல் எடுத்த பேட் கம்மின்ஸ்
இதனையடுத்து, மைதான ஊழியர்கள் வந்து அதனை சரி செய்யவே, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அது திருப்தியாக அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால், உடனடியாக சுத்தியலை வாங்கிய பேட் கம்மின்ஸ், பிட்ச்சில் அடித்து, களத்தினை சமப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பான காட்சிகள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மேலும், பாகிஸ்தான் அணி கூட தங்களின் ட்விட்டர் பக்கத்தில், இது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு, கம்மின்ஸை 'Thor' என குறிப்பிட்டிருந்தது.