VIDEO: யாருங்க இவரு..? லெப்ட் ஹேண்ட்ல பும்ரா மாதிரி பவுலிங் பண்றாரு.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா போல் ஆஸ்திரேலிய வீரர் பந்து வீசியது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

ஆஸ்திரேலியாவின் சிபில்டு ஷீல்டு கோப்பை என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. அதில் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா ஆகிய இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இதனை அடுத்து நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் விக்டோரியா அணியை வீழ்த்தி மேற்கு ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 23 வருடங்கள் கழித்து சிபில்டு ஷீல்டு கோப்பையை வென்று மேற்கு ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்தது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இப்போட்டியின் 2-வது இன்னிங்சில் 161-வது ஓவரை விக்டோரியா அணியின் நிக் மடின்சன் வீசினார். அப்போது அவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா போல பந்து வீசினார். அதுவும் இடது கையில் பந்து வீசி அசத்தினார்.
Nic Maddinson brings out the Bumrah! #SheffieldShield pic.twitter.com/rPQU5E7VW2
— cricket.com.au (@cricketcomau) April 4, 2022
இந்த வீடியோவை ஆஸ்திரேலிய அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரை பார்த்து ஆஸ்திரேலியா வீரர் பந்து வீசியது பெருமைக்குரிய விஷயம் என பதிவிட்டு வருகின்றனர். 30 வயதான நிக் மடின்சன் கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
