சேட்டை புடிச்ச ஆளுய்யா இந்த கோலி.. பக்கத்துல அவர் இருக்கும்போதே இப்டி கிண்டல் பண்றாரே.. விழுந்து விழுந்து சிரித்த வீரர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 15, 2022 04:53 PM

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் போல் விராட் கோலி பவுலிங் செய்து காட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Virat Kohli imitates Jasprit Bumrah bowling action goes viral

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்றது.

மொகாலி மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து இந்தியா தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. அதில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களும், ரிஷப் பந்த் 50 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் திமுத் கருணாரத்ன 107 ரன்கள் எடுத்திருந்தார். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

Virat Kohli imitates Jasprit Bumrah bowling action goes viral

இந்த நிலையில் இப்போட்டியின் நடுவே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா போல் விராட் கோலி நகைச்சுவையாக பவுலிங் செய்து காண்பித்தார். இதனைப் பார்த்து அருகில் இருந்த வீரர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அப்போது பும்ராவும் சிரித்துக்கொண்டே அருகிலேயே இருந்தார். விராட் கோலி, தன்னுடன் விளையாடும் சக வீரர்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள இதுபோல் அடிக்கடி குறும்புகளை செய்வது குறிப்பிடத்தக்கது.

Tags : #VIRATKOHLI #BUMRAH #INDVSL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat Kohli imitates Jasprit Bumrah bowling action goes viral | Sports News.