VIDEO: ‘ஏம்பா இது வார்ம் அப் மேட்ச் தானே..!’ பும்ரா போட்ட ‘யாக்கர்’ பால்.. கதிகலங்கிப்போன இங்கிலாந்து பேட்ஸ்மேன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இதில் முகமது ஷமி வீசிய 4-வது ஓவரில் ஜாஸ் பட்லர் (18 ரன்கள்) போல்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து மீண்டும் முகமது ஷமி வீசிய 6-வது ஓவரில் ஜேசன் ராயும் (17 ரன்கள்) ஆட்டழந்தார்.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மாலன் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் டேவிட் மாலன் 18 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த லிவிங்ஸ்டனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மறுபுறம் ஜானி பேர்ஸ்டோவும் பவுண்டரிகளை விளாசி தள்ளினார். 49 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா வீசிய 19-வது ஓவரில் போல்டாகி ஜானி பேர்ஸ்டோ வெளியேறினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்தது.
— pant shirt fc (@pant_fc) October 18, 2021
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி, 19 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 70 ரன்களும், கே.எல்.ராகுல் 51 ரன்களும் எடுத்தனர்.

மற்ற செய்திகள்
