‘எல்லா ஐபிஎல் மேட்சுக்கு முன்னாடியும்’.. ‘இதை கண்டிப்பா செய்யணும்’.. ‘கங்குலி செய்வாரா?’...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Nov 08, 2019 10:33 PM
ஐபிஎல் தொடரில் புது புது மாற்றங்கள் வந்துகொண்டுள்ளநிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், தனது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களின் பெறும் வரவேற்பை பெற்றது உள்ளூர் தொடரான ஐ.பி.எல். இதன் 13-வது சீசன், அடுத்த வருடம் தொடங்க உள்ளது. இதனால் தற்போதிலிருந்தே அதில் பல அதிரடி மாற்றங்கள் நாளுக்குநாள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா, பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘செலவை குறைக்கும் பொருட்டு, ஐ.பி.எல். தொடக்க விழாவை ரத்து செய்த முடிவை வரவேற்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, அந்தந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும். சினிமா தியேட்டர்களில், தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. கால்பந்து லீக் (பிஎஸ்எல்), புரோ கபடி ஆகியவற்றிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
அதேபோல், அடுத்த வருடம் முதல், ஐ.பி.எல்.-லில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். இதுபற்றி ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன்’ என்று கூறியுள்ளார். தற்போது பிசிசிஐ-யின் தலைவராக சவுரவ் கங்குலி இருப்பதால், எனது கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று, அவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். நெஸ் வாடியாவின் வேண்டுகோளை கங்குலி ஏற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.