'கொஞ்சநேரம்'... 'இதை செய்யப்போகும் ‘தல’ தோனி'... ‘வெளியான புதிய தகவல்’... ‘குஷியில் ரசிகர்கள்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Nov 05, 2019 08:03 PM
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான, பகலிரவு டெஸ்ட் போட்டியில், சிறப்பு வர்ணனையாளராக, முன்னாள் கேப்டன் தோனி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதிலிருந்து பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் முதல்கட்டமாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டேஸ்ட் போட்டி பிங்க் நிற பந்த்தில் பகலிரவு போட்டியாக கொல்கத்தா ஈடன் மைதானத்தில் வரும் நவம்பர் 22-ம் தேதி நடைப்பெற உள்ளது. இதனை ஊக்கும்விதமாக பல அதிரடி திட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.
இதையடுத்து, முதல்நாள் போட்டியின்போது சிறப்பு வர்ணனையாளராக வந்து, டெஸ்ட் போட்டியின் அனுபவங்களை முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்துகொள்ள உள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தகவல்கள் வெளியிட்டுள்ளது. அதற்காக தோனியிடமும் பேசப்பட்டபோது, அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. தோனி மட்டுமில்லாமல் முன்னாள் கேப்டன்கள் அனைவரையும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலிக்கு, இமெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும்நிலையில், தோனி இதில் கலந்துகொண்டால், இதுவே அவரது சர்வதேச போட்டிக்கான முதல் வர்ணனையாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.